தில்லை நடராஜர்பேரில் பதிகம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. சிதம்பரம் நடராஜர்பேரில் பதிகம் சென்னை :— ஸ்ரீ ஆதிமூலம் பிரஸில் பதிப்பிக்கப்பட்டது 1922
Contents | Home

காப்பு வெண்பா நேரிசை வெண்பா. சீர்மலத்தேன் பொழியும் தில்லைநடராஜர்தம்மேற் சீரார்புகழும் செந்தமிழைப்பாடுதற்கு — தார்புனையும் ஷண்முகர்க்குமுன்னாகத் தந்திமுகத்தெந்தைபதம் வண்மைபெறவாழ்த்துக வென்வாய். அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம். பூரணமிகுங்கிரண பருதியெனவொளிபெறவு பொன்மகுடமுடியினழகும், புகலறியயிருசெவியில் நவமணிக்குழைகளும் பொறுகண்டசரததினழகும், காரணமதாகவரு சிஷ்டியைகார்க்குமுன் கருனைகடை விழியினழகும், கஸ்தூரிதிலகமும் வெண்ணீருமுன்னிய கமலவதனத்தினழகும், வாரணமதுரி யாடை திருமேனிப்போர்வையும் வச்சிரமணி பாதகுறடும், வரிசைபெறபொளனிவர கொலுசிலம்பதிரவெகு வடிவுள்ளநடையினழகும், ஆரணமுதற்பொருள தாய்நின்றவுன்பெருமை யடியனால்பகரவெளிதோ, அன்பருளவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௧ விண்டல்த்தோர்கூட வேதகீதம்பாட விரித்தசெஞ்சடையுமாட, விடையாடயிடையாட கையிற்கண்கணமாட விரிசூலகரமுமாட, கண்டமதில்ருத்திராக்ஷத் தாழ்வடமுமாட கங்கையணிவேணியாட, தந்தமிகுமல்லிகை மலராம்விரிமார்பில் கனகமணிஊசலாட, வெண்டறளமணியாட வேதவேதியர்நாட விரலறியுமயனுமாட, மேனகைஅரம்பையொடு ஊர்வசிதிலோர்த்தமை வெண்சாமரங்களாட, அண்டர்தொழநின்றாடு முண்டகப்பாதனே அடியேனற்கருளவருவாய், அன்பருளவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௨ சிவசிவாவென்றநின் திருநாமமந்திரம் சிந்தைதனிலென்றுமறியேன், சிற்பராபரமாமு தற்பராயோகதக சிவநிஷ்டையேதுமறியேன், தவமோங்குபத்தரின தரிசனங்கண்டிலேன் சற்சனர்களுறவுமறியேன், தலமதாய்மகிமையுறு சன்னதிதனிற்சென்றுசரணங்கள் செய்துமறியேன், குவலயந்தன்னில்வளர் மானிடப்பிறவிதனிற் கொடியனாகியனாயினேன், குலைகளவுகட்காம மிவையெல்லாம்நிறைபெருகக் குடிகொண்டவம்பனேனை, அவசியம்உனதுதிருக் கண்பார்த்துரக்ஷியும் அண்ணலேயமுதவடிவே, அன்பருடவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௩ தீதுநலமிதுவென்று சிந்தையுள்ளுணராத சீரிலாநன்பருறவும், தீயோர்கள்தரிசனமும் அய்யமறமேலிட்ட ஜெகமாய்கைமூழ்கியானும், கோதிலாவாகமபுராண நெறியறியாத குருடனாயனேகவிதமாய், குற்றங்களெத்தனை செய்திருந்தாலுமுன் குழந்தையென்றெண்ணாமலென், மீதுமனவர்மங்கள் வைத்திருந்தாலிந்த மேதினியிற்புகழதாமோ, வேண்டாமிவ்வேளைதனில் ஆண்டவாவேண்டினேன் இவ்வினையகலவேணுமையா, ஆதரவிநின்னைவிட திக்கெனக்ககிலமதி லாருளாரமலநாதா, அன்பருளவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௪ மாயாவிசாரமது ஒயாமலோங்கிவளர் மானிலந்தன்னிலடியவன், மாவினைகள்பவரூன்றும் பாவங்கள்வெகுகோடி மதியாதுசெய்தனன்யான், போய்த்திரிந்துநின் றிருவடியைவிட்டுயிம் பேருலகிலாசைதொட்டு, பித்தனாயனேகவகை குற்றங்கள்செய்துவரும் பிழையெலாமகற்றிடாமல், சேயனானென்மீது வர்மம்சாதிக்கலால் சிறுவனான்சகிக்கவசமோ, தேசமெல்லாம்புகழு மாசற்றரூபனே தேஜோமயானந்தனே, ஆயுமப்புகழ்தில்லை அம்பலத்தரசனே, அடிநடுவுமுடிவானவா, அன்பருளவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௫ சஞ்சலமிகுந்துறவு பாழ்படுக்குடியதாம் தையலர்கள்யோனியழறில், தள்ளுண்டுளன்றுமே தயங்கிமிகவாடிடும் தமியனேனாதலாலென் வஞ்சமுறுமனதிருளை மாற்றவனுபானுவென மாமகிமையுற்றவுனது, மணிமந்திரவாளினால் வசைகள்வறுத்தெனது வல்வினையைநீக்கியருள்வாய், கஞ்சமலாடிதனை யென்னாளுமர்ச்சிக்க கருணைதரயிதுதருணமே, காலாகாலகண்டா நீலகண்டாசிவ கங்காதரக்கடவுளே, அஞ்சலென்றுன்பதம் நம்பினேனெப்பொழுதும் அடியேனையாளவருவாய், அன்பருளவாசனே உம்பர்டணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௬ பெருகுந்தியெழுகுமிழி டெனவருகுசெல்வமும் பெருமைபெருமகமுமிக்க, பெற்றதாய்தாதையர்கள் பெண்டீன்டீருமக்களும் பேருறவுசுற்றங்களும், கருதரியநிறைகளும் இதுவெலாங்கனவினிற் கண்டிடும்காக்ஷியன்றோ, காயநிலையெனறிடவு மொண்ணாதரைக்கணம்கருதிடவு மெய்யல்லவே, மருவுமல்லிகைமுல்லை செண்பகம்மலர்புனையும் மங்கைமகிழ்நின்றநேயா, மாராதபவபிணியில் தீராதகவலையுறும் வாதினையை மாற்றியருள்வாய், அருகுடன்ரொனறையும் தும்பமாலைணிகின்ற அமலனேயென்னையாளும் அன்பருளவாசனே உம்பர்பணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௭ பொங்குமதயானையா லீடலுற்றவம்பரைப் புகழ்பெறபாதுகாத்தீர், பூவுலகிலுனன்பர் யெவர்களையுமுன்னாளிற் பொருந்தவேகாக்கவிலையா, அந்தகஜனகனைதொட நுதல்விருதிரந்தெறித் தவர்க்கருள்புரியவிலையா, அந்தமுப்புரமெறிய நகைசெல்யவண்டமொடு யாளிகளுமதிரவிலையா, பங்கப்பேர்கொள்ளாம லிங்கனம்வந்தெனைப் பாலிப்பதனனமலையா, பாராதிருப்பதுவும் யார்செய்தபோதினையோ பாலனுக்கதுசொல்லையா, ஐங்கரனுமறுமும[க]னும் செங்கணிக்காகவலம் அருகில்வரும்பரமசிவனே, அன்பருளவாசனே உம்பரபணிஈசனே ஆனந்தநடராஜனே. — ௮ தில்லை நடராஜர்பேரில் பதிகம் முற்றிற்று.
Contents | Home